News Home     Site Home

சேலத்தில் புதிய கின்னஸ் சாதனை

சாதனை சிகரம் கிரியேசன் வழங்கும் உலக சாதனை நிகழ்வாக நம் சேலம் மாநகரில் தொடர்ந்து இடைவிடாமல் நெருப்புடன் நடனம் சேலம் சாரதா கல்லூரி சாலையில் அமைந்துள்ள சண்முகா மருத்துவமனை அரங்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 31 தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்கி ஜனவரி 1 ஆம் தேதி மாலை வரை நடைபெற்றது. சின்னத்திரை கலைஞர் செல்வி.ஐஸ்வர்யா மிக அற்புதமாக தீ பந்தங்கள் ஏந்தியவாறு நடனமாடிய போது அவரது நடன ஆற்றல் மட்டுமின்றி அசாத்தியமான துணிச்சலும் தெரிந்தது..லாவகமாக தீ பந்தத்தை சுழற்றுவதாகட்டும்…..இசைக்கு ஏற்ப நடனம் ஆடுவதாகட்டும்….உண்மையிலேயே கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது. இதற்கு முன் நிகழ்ந்த 12 மணி நேர இடைவிடாத நெருப்புடன் நடன உலக சாதனையை ஐஸ்வர்யா ஏறக்குறைய 20 மணி நேரம் ஆடி முறியடித்து புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தினார்…..இது அவருக்கு மட்டுமின்றி நம் சேலம் மாநகருக்கே பெருமைக்குரிய விசயமாகும். ஐஸ்வரியாவிடம் பேசிய போது, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர்,சிறு வயது முதலே மிக துடிப்புடன், ஏதேனும் சாதனை செய்வதில் ஆர்வமுடன் இருந்ததாகவும்….பல பட்டிமன்றங்கள்,நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஏராளமான விருதுகள் மட்டும் பரிசுகள் வென்று இருப்பதாக தெரிவித்தார்…..மேலும் இந்த அபாயமான தீ பந்த நடனம் தான் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் சாதனைக்காக மட்டுமின்றி சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு வேதனையும் காரணம் என்றார். ஆம் , “கருவில் தாய்க்கு விதையாய் முளைத்தவள் தெருவில் சில நாய்களுக்கு இறையாய் மரித்தாள் “. அந்த மாணவியின் மரணம் தம்மை மிகவும் பாதித்ததாகவும் ,இனியும் ஒரு கொடுமை அவ்வாறு நிகழக்கூடாது என்ற ஒரு விழிப்புணர்வுக்காகவும், மனித நேயம் வளர்க்கவும் தான் இந்த அசாத்திய சாதனை செய்ய துணிந்ததாகவும் கூறினார்.சொன்னதை போல் அருமையாக சாதனையை நிகழ்த்தியும் காட்டினார்….அவருக்கு நம் வாழ்த்துக்கள். நமக்கு ஏற்பட்ட சிறிய வருத்தம் என்னவென்றால் , இந்த நிகழ்ச்சி சரியனபடியாக நம் சேலம் மக்களை சென்றடையவில்லை என்பதுதான் ….

சேலம் ஜில்லா.காம் காக, R. கௌரி சங்கர் .

 

Share

Leave a Reply