News Home     Site Home

சேலத்தில் திருநங்கையர் குறும்படவிழா (டிசம்பர் 13-14)

Transgender-short-film-festival-salem

காலங்காலமாக நம்முடனேயே பயணித்து வந்தாலும் நம்மால் கண்டுணரப்படாமலும்,கண்டும் விலகி ஒடுகிற ஒரு சமூகமாகத்தான் திருநங்கையர் நமக்கு பரிச்சயம். சாதி,சமய,இன ,மொழி வேறுபாடின்றி அனைத்து தரப்பினாலேயும் இவர்கள் பொது சமூகத்தின் மையநீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கண் முன் காணும் நிதர்சனம்.

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக திருநங்கைகள்,முற்போக்குவாதிகள்,சமூக சீர்திருத்த கருத்துடையோர் என பொதுதளத்தின் செயல்பாட்டாளர்களின் சீரிய முயற்சிகளால் இச்சமூகம் இன்று கலைத்துறை,எழுத்து, காட்சி ஊடகம், சமூகப்பணி என தன் எல்லைகளை விரித்துவருகிறது. ஆயினும் முழு அங்கீகாரம் கிடைக்காத நிலையில் இச்சமூகத்தின் பெரும்பான்மையினோர் கடைகளில் கையேந்தியும்,கடைச்சரக்காகியும் தான்
வாழ்வை கழிக்கின்றனர்.

இந்த இருள் வாழ்விற்கு பொதுசமூகமும் மௌனமான சாட்சியாய் இன்னும் இருப்பதுதான் வேதனை.ஆயினும் பல திருநங்கைகள் தங்கள் தொடர் போராட்டங்களால் சமூகத்தின் மௌனத்தை உடைக்க துவங்கியுள்ளனர்.திருநங்கையர் சமூகத்தின் இந்த இழிநிலைக்கு ஊடகங்களின் பங்கை ஒதுக்கிவிட முடியாது. “ஊரோரம் புளியமரம், கொக்கரகோழி கூவுற வேலையிலே,ஒம்போது …”என ஒவ்வாத காட்சிகளால் தங்கள் பங்கிற்கு இச் சமூகத்தின் முகங்களுக்கு முகமூடி மாட்டி அழகு பார்த்தது.

இந்நிலையில் சில மாற்றுஊடகங்கள் திருநங்கைகளின் அர்த்தமான வாழ்வியல் கூறுகளை, வலிகள் நிறைந்த வாழக்கை பாதையை,பொதுசமூகம் கண்டிராத சமூக கட்டமைப்புகளை,காயங்கள் வழியும் காதலை, நாம் கேட்டும், ,கண்டிராத போரட்டங்களை,வெற்றிகளை,அவைகள் தந்த வடுக்களை என அனைத்தையும் அப்பட்டமாய் உள்ளது உள்ளபடியே படம் பிடித்துள்ளன. இவைகளை சமூகத்தின் கண்களுக்கு
காட்சிப்படுத்த வேண்டிய சூழலை நாம்கொண்டுள்ளோம்.“*அன்பின் வழியது உயிர்நிலை**” *உயரிய கருப்பொருளை கைகொண்டு கடந்த ஆகஸ்ட் 9,10 -2013 அன்று எங்கள் திருநங்கையர் குறும்பட பயணத்தினை மதுரை மண்ணில் துவக்கினோம்.கிட்டதட்ட 15 குறுபடங்கள்,ஆழமான கருத்துரைகள்,நேர்த்தியான விவாதங்களோடு நிறைவாக நடந்தது.

நிகழ்வின் இரண்டாம் பயணம் நம் சேலம் மாநகரில் வருகிற டிசம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் நடைப்பெறவுள்ளது.திருநங்கைகள் குறித்த ஆழமான புரிதலை,அவர்களின் தனித்து விடப்பட்ட உணர்வுகளை,விடியலை நோக்கிய அவர்களின் பயணங்களை பொதுசமூகத்தில் பகிர்ந்துக்கொள்ள ஏதுவான இந்நிகழ்வை சாத்தியப்படுத்த சமூக ஆர்வலராய், முற்போக்கு சிந்தனை மேல்தாங்கியிருக்கும் தாங்களின் நிறைந்த அன்பையும்,இயன்ற பொருள் உதவியினையும் தந்து உதவுமாறு *“ நாடோடிகள் திரைப்பட சங்கம் – சேலம் மற்றும் பாரதிக்கண்ணம்மா அறக்கட்டளை – மதுரை ”* சார்பாக தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

சேர்ந்து நடப்போம்!! சேர்த்து நடப்போம்!!

மேலும் தொடர்புக்கு:  இமயபாலன்: 90250 63002 , பிரியாபாபு –8438907100

- சேலம் ஜில்லா.காம்

 

 

Share

World Environment Day at Salem Steel Plant

World Environment Day was celebrated on June 5, 2013 at Salem Steel Plant with this year’s theme of ‘Think. Eat. Save’ which aims to encourage reduction in wastage and saving of food. On the occasion, General Manager (Finance & Accounts), Shri N Tamilarasan, hoisted the Environment Flag in the presence of S/Shri JC Mahapatra, General Manager (Personnel & Administration), PK Mishra, General Manager (Works), G Viswanadham, General Manager (Projects), AK Jaiswal, General Manager (Maintenance), senior officers and employees.

Addressing the gathering, Shri Tamilarasan said that it calls for improved awareness of the environmental impact of the food choices made by us and take informed decisions to reduce wastage of food, in order to not only save money, but most importantly to ensure equitable distribution so that no one goes hungry. He elaborated that if food is wasted, it means that all the resources and inputs that have been used in the production of food are lost without any gain to the society.

Shri Tamilarasan urged Salem Steel Collective to take steps for protection of environment by reduction in rotting of wasted food which creates methane, one of the most harmful greenhouse gases that leads to climate change. He also enthused the collective to save food which will go a long way in making it available to the deprived ones and ensure equitable and sustainable development. Employees took pledge to improve the environment by adopting positive steps for reduction in wastage of food, conservation of water and energy etc.

A mass tree planting programme was also conducted in which 100 saplings were planted by the officers and the employees in works premises of the plant.

Share

சேலம் ஸ்பெஷல்- தட்டுவடை செட்!!!

சேலத்துல என்னங்க ஸ்பெஷல்
மாம்பழம் , இரும்பு , சேகோ , வெள்ளி ?!!!!
இன்னும் ஸ்பெஷல் இருங்குங்க !!! வீடியோவ பாருங்கா …

-சேலம்ஜில்லா.காம்

Share

Fire Service Week observed at Salem Steel Plant!!!

Salem Steel Plant’s Central Industrial Security Force (CISF) Fire Wing observed Fire Service Week from April 14 to 20. Shri A Bandyopadhyay, Executive Director, participated in the valedictory function held on April 20 and witnessed a fire fighting demonstration by the CISF Fire Wing. He appreciated the demonstration and urged them to continue to maintain their standards.

Shri Bandyopadhyay and Shri PK Joy, Dy Commandant, CISF, gave away prizes to winners of various competitions held on fire safety during the week. Senior officers, employees and CISF personnel also participated in the function.

Share

சேலத்திற்கு விரைவில் மின்தீர்வு!!!

மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் படிப்படியாக மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் பழைய அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்டுகள் உள்ளன. இதில் யூனிட் ஒன்றுக்கு தலா 210 மெகாவாட் வீதம் 4 யூனிட்டுகளுக்கு 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இது தவிர புதிய அனல் மின்நிலையம் ரூ. 3 ஆயிரத்து 550 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இந்த புதிய அனல்மின் நிலையத்தில் பல்வேறு கட்டங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை ஓட்டத்தின் போது ஏற்படும் கோளாறுகள் அவ்வப்போது சரிசெய்யப்படுகின்றன. பலமுறை கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் தடைபட்டு வந்தாலும் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி முதல் மீண்டும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் 180 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது மின்சார உற்பத்தி படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 375 முதல் 400 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்சார உற்பத்தியை 600 மெகாவாட்டாக உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நன்றி : மாலைமலர்

Share

சேலத்தில் உலக நுகர்வோர் தினவிழா!!!

சேலம் நுகர்வோர் குரல் சார்பில் உலக நுகர்வோர் தினவிழா நேற்று(17/03/2013)
கொண்டாடப்பட்டது. சேலம் சண்முகா மருத்துவமனை அரங்கில் நடைபெற்ற
இவ்விழாவில் சண்முகா மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் பன்னீர்செல்வம்,
ராஜாஜி பாலிடெக்னிக் ஆடிட்டர் ரங்கராஜன், ஜெயராம் கல்லூரி தாளாளர்
ராஜேந்திர பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சேலம் நுகர்வோர் குரல் நிறுவன தலைவர் பூபதி செயல் திட்டம் குறித்து பேசினார்,
பொருளாளர் பிரபாகரன் வரவேற்புரையாற்றினர் மற்றும் செயலாளர் சங்கர் அறிக்கை வாசித்தார்.

 

 

 

 

 

 

 

 

தமிழ்நாடு சமூக சேவகர் சங்க நிறுவனத் தலைவர் டிராபிக் ராமசாமி மற்றும் பிரபல
எழுத்தாளரும் திரைப்பட கலைஞருமான அஜயன்பாலா ஆகியோர் இவ்விழாவிற்கு
சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். டிராபிக் ராமசாமி அவர்கள்
நுகர்வோர் விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தோருக்கு விருது
வழங்கப்பட்டது. இதில் “சிறந்த குடிமகன்” விருது டிராபிக் ராமசாமி அவர்களுக்கும்,
“சிறந்த எழுத்தாளர்” விருது அஜயன்பாலா அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இவ்வரிசையில் மேலும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தோருக்கு
விருதுகள் வழங்கப்பட்டன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-ராதிகா கணேசன் (சேலம்ஜில்லா.காம்)

படங்கள்: ப்ரவீன் குமார் செ (சேலம்ஜில்லா.காம்)

Share

சேலத்தில் HCL வேலை வாய்ப்பு முகாம்!!

பெரியார் பல்கலைக் கழகம் சார்பில் இளநிலை-முதுநிலை பட்டதாரி மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. 2011 மற்றும் 2012-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பி.காம்., எம்.காம். ,எம்.பி.ஏ., பி.பி.ஏ., பி.ஏ.பொருளியல் படித்து முடித்தவர்களுக்கு கோவை டைடல் பார்க்கில் உள்ள எச்.சி.எல்(HCL) நிறுவனத்தில் அனலிஸ்ட் வேலைக்கு மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். வருட சம்பளம் ரூ 1லட்சத்து 20 ஆயிரம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை வழங்கப்படும். வருகிற 09/03/2013-ந் தேதி காலை 9 மணிக்கு சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ சக்தி கைலாஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

2010, 2011 மற்றும் 2012-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற எம்..எஸ்.சி. இயற்பியல், வேதியியல். உயிர் அறிவியல். எம்.காம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும். இதே பாடபிரிவுகளில் 2013-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து வெளியேறும் மாணவ-மாணவிகளுக்கும் புளு லோட்டஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அளிப்பதற்கான முகாம் வருகிற 23/03/2013-ந் தேதி காலை 9 மணிக்கு சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ சக்தி கைலாஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர் காணல் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே படித்த கல்லூரிகளிலும், தற்போது படித்துக் கொண்டு இருக்கும் கல்லூரிகளிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும், பெரியார் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு அலுவலர் மற்றும் புவியமைப்பியல் துறை பேராசிரியர் முனைவர் வெங்கடாசலபதி மற்றும் ஸ்ரீசக்தி கைலாஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலை வாயப்பு அலுவலர்கள் மணிகண்டன். விஜய தேவநேசன் ஆகியோரையும் தொடர்பு கொள்ளலாம் என்றும் பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர் முத்துச் செழியன் கூறி உள்ளார்.

-சேலம்ஜில்லா.காம்

Share

மேட்டூர் அணையில் மூழ்கியுள்ள கோவில்கள்!!!

மேட்டூர் அணை கட்டுமான பணியின் போது, அணையையொட்டி அமைந்திருந்த நூற்றுக்கணக்கான கிராமங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது கீரைக்காரனூர் பகுதியில் வீரபத்திரன் சுவாமி கோவில் இருந்தது. பின்னர் அந்த கோவில் அணையில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி விட்டது. இதே போல் அணையையொட்டி பண்ணவாடி பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தின் இரட்டை கோபுரங்களும், ஜலகண்டேஸ்வரர் கோவிலும் நந்தி சிலையும் தண்ணீரில் மூழ்கின. அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழே குறையும் போது, பண்ணவாடி பகுதியில் கிறிஸ்துவ ஆலயம், ஜலகண்டேஸ்வரர் கோவிலும், நீர்மட்டம் 44 அடிக்கு கீழே குறையும் போது கீரைக்காரனூர் பகுதியில் உள்ள வீரபத்திரன் கோவில் கோபுரமும் வெளியில் தெரியும்.

தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31.70 அடியாக குறைந்ததால், கீரைக்காரனூரை ஒட்டியுள்ள வீரபத்திரன் கோவில் கோபுரத்தின் 2 நிலைகள் வெளியில் தெரிகின்றன. 7 நிலைகளை கொண்ட இந்த கோவிலின் முன் மண்டபம் சுமார் 20 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல் நீர் மட்டம் குறையும் போது வெளியே தெரியும் ஜலகண்டேஸ்வரர் கோவிலையும் பிரம்மாண்டமான நந்தி சிலையையும் படத்தில் காணலாம். இப்படத்தில் உள்ள மற்றொரு பாறை போன்ற அமைப்பு அக்காலத்தில் ராஜாக்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்துவிட்டு கோட்டையூரில் உள்ள கோட்டைக்கு செல்ல பயன்படுத்திய சுரங்கபாதையின் முகப்பு கோபுரமாகும். இந்த கோவில்கள் அனைத்துமே 200 ஆண்டு கால பழம்பெருமை வாய்ந்தவையாகும்.

நீர்மட்டம் மேலும் குறைந்தால் இந்த கோவிலுக்கு வரும் மக்கள் கூட்டமும் அதிகரிக்கும் என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

-ராதிகா கணேசன்

Share

அரசு பொருட்காட்சியில் முதல் பரிசு!!!

சேலத்தில் நடைபெற்ற அரசு பொருட்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்த தனியார் அரங்குகளில் சிறந்த அரங்கத்திற்கான முதல் பரிசு “சேலம் ஈசன் இளங்கோ” நிறுவனத்திற்கு கிடைத்தது. இந்நிறுவனம் சார்பில் ஒரு அழகிய வீடு போன்று அமைக்கப்பட்டு இருந்த அரங்கத்தின் உள்ளே, வீட்டின் ஒவ்வொரு அறையையும், வண்ணமிகு வால்பேப்பர்கள், ஸ்க்ரீன் துணிகள், அலங்கார தரைவிரிப்புகள் மூலம் எவ்வாறெல்லாம் அழகு படுத்தலாம் என்பது குறித்தும், வீட்டின் மகிழ்ச்சியில் வண்ணங்களின் பங்கு குறித்தும் இலவச ஆலோசனைகள் வழங்க பட்டதோடு, தயார் நிலை திரை சீலைகளின் விற்பனை பிரிவும் அழகாக அமைக்கப்பட்டு இருந்தது..

இரண்டு லட்சத்திற்கும் மேலான மக்கள் பார்வையிட்டும், அழகிய இல்லத்திற்கான ஆலோசனைகளையும் பெற்றும் பாராட்டி சென்ற இந்த அரங்கை அமைத்த சேலம் ஈசன் இளங்கோ நிறுவனத்திற்கு, அரசு பொருட்காட்சியில் சிறந்த தனியார் அரங்கத்திற்கான முதல் பரிசை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு மகரபூசணம் அவர்கள் வழங்கினார்…

 

Share

எழுதுகோல் சிற்பங்கள்!!!

ம் முன்னோர்கள் கல்லிலே செதுக்கிய சிற்பங்களை சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் சாக்பீஸில் செதுக்குகிறார். அதுவும் எவ்வளவு பெரிய சிற்பமாக இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்குள் வேலையை முடிப்பதுதான் ஆச்சர்யம்!

சாக்பீஸ் சிற்பி சரவணன், ”நான் சேலம் பொன்னாம்மாபேட்டையைச் சேர்ந்தவன். எங்க அப்பா சேகர், அம்மா சரசு. நாங்க மொத்தம் நாலு பசங்க. நான் மூத்தப் பையன். எனக்குச் சின்ன வயதில் இருந்தே கலை ஆர்வம் அதிகம். அதனால், கோயில்களுக்குச் சென்றால் கோயிலின் கோபுரத்தின் மீது இருக்கும் சிற்பங்களைப் பார்த்து வியந்து ரசிப்பேன்.

எங்க அப்பாவிடமும், அம்மாவிடமும் எப்படி இவ்வளவு தத்ரூபமாக வரைகிறார்கள்னு ஆர்வமாகக் கேட்பேன். என்னுடைய கலை ஆர்வம் பின் நாளில் சிற்பங்களை வரையத் தூண்டியது. நான் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன். என்னிடம் கற்களைக் கொண்டு சிலைவடிக்க தேவையான உபகரணம் இல்லை. என்னிடம் இருந்தது சாக்பீஸ் மட்டுமே. அதில் வரைந்து பார்க்கலாம் என்று ஊசியைப் பயன்படுத்தி வரைந்து பார்த்தேன். அடிக்கடி சாக்பீஸ் உடைந்துபோனது. பல முயற்சிக்குப் பிறகு அழகிய ஒரு பெண் சிற்பத்தைச் செதுக்கினேன். அன்று தொடங்கி சாக்பீஸில் சிற்பங்களைச் செதுக்கிவருகிறேன்.

தஞ்சைப் பெரிய கோயில், ஈஃபிள் டவர், பிரமிட், சீனப் பெருஞ்சுவர் இப்படி உலக அதிசயங்களும், கட்டபொம்மன், நேரு, காந்தி, பெரியார் என தலைவர்கள் சிற்பமும், கோயில்களில் இருக்கும் சாமிகள் சிற்பங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் செதுக்கி இருக்கிறேன். என் நண்பர்களுக்குப் பிறந்தநாள் என்றால் ஒரு சாக்பீஸ் வாங்கி அழகிய சிற்பம் செதுக்கிப் பரிசு அளிப்பேன்” என்கிறார்!

நன்றி : விகடன்

Share